காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
கொடூரம்... மின்வாரிய ஊழியர் படுகொலை.!! தாயுடன் சேர்ந்து 20 வயது இளைஞன் வெறி செயல்.!!
சேலம் மாவட்டத்தில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்த ஊழியர் அவரது மனைவி மற்றும் மகனால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இறந்த நபரின் மனைவி மற்றும் மகனை கைது செய்துள்ள காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். 57 வயதான இவர் மின்சாரத் துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி(48). இந்த தம்பதியினருக்கு கலைச்செல்வன் என்ற 20 வயது மகன் இருக்கிறான். சமீப காலமாகவே ஆதி மூலம் மற்றும் அவரது மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்தது.
இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய ஆதிமூலம் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் மனைவி மற்றும் மகனை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது ஆதிமூலம் மற்றும் வளர்மதி இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது . இதில் ஆத்திரமடைந்த ஆதிமூலம் தனது மனைவியை தாக்கி இருக்கிறார். தாயின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த மகன் கலைச்செல்வன் தந்தையை வெளியேறுமாறு கூறியிருக்கிறார். ஆனால் ஆதிமூலம் வெளியேறாமல் அவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளச்சாராய் விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பு.? ஆதாரங்களுடன் ஆளுநரை சந்தித்த அண்ணாமலை.!!
இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வன் மற்றும் வளர்மதி ஆகியோர் இரும்பு கம்பியால் ஆதிமூலத்தின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த ஆதிமூலம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆதிமூலத்தின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்தனர். அங்கு சடலமாகக் கிடந்த ஆதிமூலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த ஆதிமூலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வளர்மதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க: வாவ்.!! அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.!! தினக்கூலி தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்.!!