வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
வாவ்.!! அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.!! தினக்கூலி தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்.!!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்மா உணவகத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களின் தினக்கூலியில் 25 ரூபாய் உயர்த்தி சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் போது கடந்த 2013 ஆம் வருடம் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நாளடைவில் இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தினால் பல்வேறு ஏழை மக்கள் மற்றும் தொழில் மற்றும் வேலை தேடி மாநகராட்சிக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெற்றனர். தமிழகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் ஆட்சி மாற்றம் நடந்த போதும் இந்தத் நலன் கருதி அதே பெயரில் தொடர திமுக அரசும் அனுமதி அளித்தது.
இதையும் படிங்க: அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் பரிதாப பலி; நெல்லையில் சோகம்.. நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!
அம்மா உணவகத்தில் தினக்கூலி பணியாளர்கள் நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் ஊதியத்திற்கு பணி செய்து வந்தனர். இந்நிலையில் அவர்களது தினக்கூலி ஊதியத்தில் 25 ரூபாய் கூலி உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வாள் அம்மா உணவகத்தில் பணியாற்றும் தினகூலி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: டேய் படிடா... அறிவுரை கூறிய அம்மா, தம்பி கழுத்தறுத்து கொலை.. அமைதியாக இருந்து அதிர்ச்சி தந்த மூத்த மகன்.!