குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பல கோடி கணக்கில் மோசடி செய்த பிரபல மோசடி மன்னன் பாச்சிக்கோட்டை ஊராட்சிமன்ற தலைவர் கைது.!
கோவையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தி வரும் மாதேஸ்வரன் என்பவர் தனது மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு கடன் பெற்றுத் தருமாறு நண்பர்கள் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் பன்னீர்செல்வம் என்பவரை அணுகியுள்ளார்.
மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாகக் கூறி, அதற்கு கமிஷன் ரூ.2 கோடி, ஆவணச் செலவுக்கு ரூ.85 லட்சம் என ரூ.2.85 கோடி மற்றும் ஆவணங்களை மாதேஸ்வரனிடமிருந்து பன்னீர் செல்வம் பெற்றதாக கூறப்படுகிறது. பல மாதங்களாகியும் கடன் பெற்றுத் தரவில்லை என்றும், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்கு மிரட்டுவதாகவும் பன்னீர்செல்வத்தின் மீது கோவை குற்றப் பிரிவில் மாதேஸ்வரன் சமீபத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குறிஞ்சி நகர், ஆண்டிகுளம் ஆகிய இடங்களில் உள்ள பன்னீர் செல்வத்துக்குச் சொந்தமான வீடு, 2 பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 5 இடங்களில் கோவை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதனையறிந்த பன்னீர்செல்வம் தலைமறைவானார்.
இதனையடுத்து , தலைமறைவாகி உள்ள பன்னீர்செல்வத்தை போலீஸார் தேடி வந்தனர். பன்னீர் செல்வத்தின் மீது மேலும் பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவரை மோசடி மன்னன் என அழைத்துவந்துள்ளனர். ஆனாலும் தனது பண பலத்தாலும், உருட்டல் மிரட்டல் பலத்தாலும் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்.
இந்தநிலையில், கோவையைச் சேர்ந்த மருத்துவமனை உரிமையாளரிடம் ரூ 2.85 கோடி மோசடி செய்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளியும் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய நபருமான பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தை கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய சோதனையில் அப்பகுதி மக்கள் கருதியது போலவே பன்னீர்செல்வம் மோசடி மன்னன் என்பது உறுதி ஆகும் அளவிற்கு அவரிடம் பல ஆவணங்கள் சிக்கியுள்ளது. சோதனையின்போது ஏராளமான கையெழுத்திட்ட நிரப்பப்படாத முத்திரை தாள்கள், புரோ நோட்டுகள், காசோலைகள், பல்வேறு நபர்களுடன் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இந்த சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் இப்படி ஒரு மோசடி மன்னனை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுத்து விட்டோமே என கண்ணீர் வடிக்கின்றனர்.