திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வழுக்கி விழுந்தவர்களை தூக்க சென்ற போலீசார்; கல்லால் அடித்த போதை ஆசாமிகள்.! குடிபோதையில் அட்டகாசம்.!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் வசித்து வருபவர் ஊமையன் @ விஜயன் (வயது 24). இவரின் சகோதரர் தாமரைக்கண்ணன் (வயது 26). இவர்கள் இருவரும் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்கள்.
மதுபோதைக்கு அடிமையான இருவரும், அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்துவது இயல்பு. இந்நிலையில், நேற்று இருவரும் மதுபோதையில் அண்ணா சிலை அருகில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளனர்.
இதையும் படிங்க: போலி சாவி தயாரித்து சோறுபோட்ட முதலாளிக்கு துரோகம்; சீர்காழியில் அதிர்ச்சி சம்பவம்.!
உதவி செய்த காவலர்கள்
அச்சமயம் மழை நீரில் வழுக்கி விழுந்தவர்களை, அங்கிருந்த ஊர்க்காவல் படை அதிகாரிகளான நரேந்திர அர்ஜுன், முகிலன் மீட்டுள்ளனர். அச்சமயம் சகோதரர்கள் இருவரும் காவலர்கள் தன்னை கண்டிப்பார்கள் என்ற பயத்தில், அவர்களிடம் வாக்குவாதம் செய்து கல்லால் அடித்து தாக்குதல் நடத்தினர்.
உடனடியாக அங்கிருந்த பிற காவலர்கள் இளைஞர்களை லாவகமாக பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். உதவி செய்ய சென்ற காவலர்களுக்கு நேர்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "சிறுமி ஒருவருக்கு ரூ.30 ஆயிரம்" - மகளின் தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்; சென்னையில் பகீர்.!!