96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வறுமையால் வேலைக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பர்வைசர்..!
17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்த மேற்பார்வையாளர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் வெப்படை பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இதே ஆலையில் 17 வயது சிறுமி பணியாற்றி வந்த நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய மோகன்ராஜ், காதலிப்பதாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வெப்படை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.