மீண்டும் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை!! மே 17ம் தேதி முதல் அமல்!! தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது அரசு.



new-lockdown-rules-for-tamilnadu

தமிழகத்தில் புதிய ஊரடங்கு நடைமுறை குறித்து தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதேநேரம் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழகத்தில் வரும் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சமயத்தில் கட்டுப்பாடுகள் குறித்தும் தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு நடைமுறைகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில், மேலும் பல புதிய நடைமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

* நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை.

* வரும் மே 17 ஆம் தேதி முதல், அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயம் நடைமுறைக்கு வரும் .

* காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை.

* தனியாக செயல்படும் மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதி.