ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வெளிநாட்டில் கணவன்! புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை! வெளியான அதிர்ச்சி காரணம்!
வேளாங்கண்ணி அருகே நிர்த்தனமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயபால். இவரது மகள் சுகந்தி. இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் முடித்த இருமாதத்திலேயே ராஜா வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். அதனை தொடர்ந்து சுகந்தி ராஜாவின் வளர்ப்பு தந்தையான பாஸ்கரன் என்பவரது வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சுகந்திக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகியுள்ளது. அதனை தொடர்ந்து பாஸ்கரன் அவரது பெற்றோரிருடன் தங்கியிருக்குமாறு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் ராஜா கடந்த சில நாட்களாகவே சுகந்தியிடம் பேசாமல் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவுளைச்சலில் இருந்த சுகந்தி தனது தந்தை வீட்டிற்கு பின்புறம் உள்ள கொட்டகையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சுகந்தி தூக்கில் தொங்குவதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.