குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
சூப்பர் தகவல்.. விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும்.!! வெளியான மாஸ் தகவல்..
தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய தமிழக ஆளுநர், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
1. நீட்தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைப்படி நீட் தேர்வு குறித்து சட்ட முன்வடிவு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
2. மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி தமிழகத்துக்கு போதுமானதாக இல்லை எனவும், தடுப்பூசி அளவை உயர்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
3. கால்நடை பராமரிப்பு ,இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல் ஆகியவை ஊக்குவிக்கப்படும்.
4. தமிழகத்தில் கொரோனா குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்பு காண தேர்தல் நடத்தப்படும்.
5. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாளில் ரேஷன் கார்டு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்..