ஊட்டிக்கு யாரும் போக வேண்டாம்.. வெளியான முக்கிய அறிவிப்பு.!
வானிலையை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் சுற்றுலா பயணிகளை 3 நாட்களுக்கு வர வேண்டாம் என தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வெயிலுக்கு இதமான மழை
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாறி மாறி மழை பெய்து வருகின்றது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தை வாட்டி எடுத்த வெயிலுக்கு இதமாக இந்த மழை மாறியுள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானல் போக போறிங்களா.? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க.!
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
அந்த வரிசையில், நாளை முதல் நீலகிரி மாவட்டத்திற்கு மே 18,19 மற்றும் 20 ஆகிய மூன்று தேதிகளில் மிக அதிகமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அந்த மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் கோரிக்கை
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா பயணிகளை மே 18,19 மற்றும் 20 ஆகிய 3 நாட்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துத்துள்ளார்.
இதையும் படிங்க: ஊட்டி இன்பசுற்றுலாவில் சோகம்; 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து சிறுமி பலி., 20 பேர் படுகாயம்.!