நிவர் புயல் நாளை கரையை கடப்பதை பார்க்க வேண்டுமா..? அப்போ இதனை செய்யுங்கள்...



Niver cyclone moving update and link for live updates

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் நாளை கரையை கடக்க இருக்கும் நிலையில் புயலின் நிலையை தெரிந்துகொள்ள இணையதள முகவரி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 430 கி.மீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

தற்போது வடக்கு - வடமேற்கு நோக்கி நகரும் நிலையில் அதன்பின் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nivar Cyclone

புயல் கரையை கடக்கும்போது காரைக்கால், நாகை, கடலூர், புதுவை, மயிலாடுதுறை மற்றும் செங்கல்ப்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலோ,  சில நேரங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலோ காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயலின் தாக்கம் கஜா புயலின் தாக்கத்தை விட குறைவாகவே இருக்கும் எனவும், இருப்பினும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீவிர புயலில் இருந்து மக்களை காப்பாற்றவும், நிலைமையை உடனே சரி செய்யவும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பேரிடர் மீட்பு குழு, மோட்டார் இயந்திரங்கள், கடலோர காவல் படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புயல் கடந்து செல்லும் பகுதிகளின் வழியே செல்லும் ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில் நாளை புயல் கரையை கடக்கும் நிகழ்வையும், புயல் தற்போது உள்ள நிலையையும் தெரிந்துகொள்ள இணையதள முகவரி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. windytv.com என்ற இந்த இணையதள முகவரி மூலம் புயல் கரையை கடப்பதை காணலாம்.