35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
தொடங்கியது பருவமழை.. மக்களே கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்... விவரம் இதோ.!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. பருவமழை தொடங்கியதற்கு முன்னதாகவே, வளிமண்டல சுழற்சியின் காரணமாக பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நேரங்களில் சாலைகளில் வெள்ளம் செல்கிறது.
இவ்வாறான தருணங்களில் நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் மழை காலங்களில் இடி-மின்னல் தாக்குதல், மின்சார தாக்குதல், வெள்ளத்தில் இழுத்து செல்லப்படுதல், தண்ணீர் தேங்கியுள்ள நீரில் விழுதல் போன்ற சில நிகழ்வுகள் நேரலாம். இதனால் நாம் பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.
இதையும் படிங்க: #Breaking: நாளை பொளந்துகட்டப்போகும் மழை; 4 மாவட்டங்களில் விடுமுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
அதன்படி, தொடர் மழை பெய்யும் சமயங்களில், தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. அதேபோல, மழை நிறங்களில் மரத்தடியில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். சாலை, வயல்வெளிப்பகுதியில் நடந்து செல்லும்போது, மின்சாரக்கம்பிகள் அறுந்து கிடைக்கலாம். இதனால் கவனத்துடன் நடை வைப்பது நல்லது.
கவனமாக இருங்கள்
மழை பெய்துகொண்டு இருக்கும்போது இடி-மின்னல் இல்லை என்றாலும், வீட்டில் இருக்கும் டிவி, பிரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்களின் ஒயர்களை கழற்றி வைக்க வேண்டும். லைட், பேன் போன்றவற்றை ஆன் செய்யும்போது, கைகள் ஈரமாக இல்லாததை உறுதி செய்து ஸ்விட்சை போட வேண்டும். ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு குழந்தைகளை விளையாட, குளிக்க அனுப்ப வேண்டாம்.
செல்போன், டார்ச் லைட் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மெழுகு வர்த்திகளை வாங்கி வைத்துக்கொள்ளவும். உள்ளூரில் உங்களின் பகுதிகளில் மின்சாரம், குடிநீர் வழங்கல் உட்பட அரசு பணியாளர்களின் விபரங்களை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அவசர அழைப்புகளுக்கு மாநில அரசின் 1913 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.
இதையும் படிங்க: பாலத்துல இப்பவே இடம் பிடிச்சிரலாம்.. வெள்ளத்தை நினைத்து வேதனையில் வேளச்சேரி மக்கள்.. செய்த காரியம் என்ன?