குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஆ., படம் பார்ப்பவரா நீங்கள்?.. மிகப்பெரிய ஆபத்து.. கேடி கும்பல் கில்லாடித்தனம்.. உஷார் மக்களே.!
இன்றுள்ள இளம்தலைமுறையில் பெரும்பாலானோர் சபல எண்ணத்துடன் இருப்பதால் அதிகளவில் ஆபாச இணையதளங்களில் கேடான வீடியோ பார்த்து ரசித்து வருகின்றனர். இது அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலையில், ஆபாச கும்பலால் பெரும் ஆபத்தில் சிக்கும் துயரமும் நடந்து வருகிறது. மேலும், ஆபாச வீடியோ பார்ப்பதை பலரும் பொழுதுபோக்காக்கியுள்ள பரிதாபமும் நிகழ்ந்துள்ளது.
செல்போன், இன்டர்நெட் என நம்மிடையே உலகத்தில் உள்ள பல நல்ல விஷயங்களை நொடியில் கற்றுக்கொள்ள தலைசிறந்த ஆயுதம் இருந்தாலும், அதனை எதற்காக? எப்படி உபயோகம் செய்கிறோம் என்பதை பொறுத்து தான் நமக்கு அனைத்தும் கிடைக்கிறது. ஒருவர் செல்லும் வழியில் பூக்களால் மறைத்து வைக்கப்பட்ட முட்கள் பாதையும் இருக்கும், தெளிவான மறைவில்லாத மண் பாதையும் இருக்கும். எந்த சாலையில் நாம் பயணம் செய்கிறோம் என்பதை பொறுத்தே அந்த பலன் கிடைக்கும்.
இந்நிலையில், சல்லாப எண்ணம் கொண்ட இளைஞர்கள் முழுநேரமாக ஆபாச வீடியோவை பார்த்து வரும் நிலையில், இவர்களை குறிவைத்து களமிறங்கும் ஆபாச இணையதள குற்றக்கும்பல் இளைஞர்களை மிரட்டி பணம் பறித்து வரும் சம்பவம் உலகளவில் நடக்கிறது. இந்தியாவில் அவை அதிகளவு நடைபெறுகிறது. சென்னையை சேர்ந்த இளம் தொழிலதிபர் வேலைநாட்களில் கருதும் கண்ணுமாக இருந்துவிட்டு, விடுமுறை நாளில் (ஞாயிற்று கிழமை) சொகுசு விடுதியில் அறையெடுத்து உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இப்படியாக அவரின் வாழ்நாட்கள் கடக்க, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவரின் அலைபேசி இளம்பெண் தொடர்பு கொண்டுள்ளார். வீடியோ காலில் தொடர்பு கொண்ட அறிமுகம் இல்லாத பெண்ணிடம் தொழிலதிபரும் பேச, இவர்கள் பேச தொடங்கிய சிலமணிநேரத்திலேயே ஆடைக்கு விடைகொடுத்து நிர்வாண பேச்சு என்ற அளவுக்கு சென்றுள்ளது. சல்லாப எண்ணம் கொண்டவர் இளம்பெண்ணை ரசித்து வருணை செய்ய, நிர்வாண வீடியோ கால் உல்லாசத்தின் போதே தொழிலதிபருக்கு வீடியோ ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், தொழிலதிபர் பெண்ணை வீடியோ காலில் மெய்மறந்து ரசிக்கும் பரிதவிப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்குள், அவரின் அலைபேசிக்கு தொடர்பு கொண்ட வாலிபர் ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிடப்போகிறோம். அதனை செய்யாமல் இருக்க நாங்கள் கூறும் பணத்தை வங்கிக்கணக்குக்கு அனுப்பி வை என்று கூறியுள்ளார். இதனால் பதறிப்போன தொழிலதிபரும் இலட்சங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதனைப்போன்ற மோசடி கும்பல் சென்னை உட்பட பல்வேறு பெரு நகரங்களில் தங்களின் கைவரிசையை காண்பித்து வருகின்றனர். வடபழனியை சேர்ந்த வாலிபர் லோகண்டோ டேட்டிங் செயலி மூலமாக நகை மற்றும் பணத்தை பறிகொடுத்த சம்பவமும், அதனைப்போன்ற பல சம்பவங்களும் நினைவுகூறத்தக்கது. இப்படியாக தினமும் ஒருவர் என சென்னையில் மட்டும் பாதிக்கப்படும் நிலையில், விஷயம் வெளியே தெரிந்தால் மானக்கேடு என நினைத்து புகார் அளிப்பதில்லை.
அவ்வாறு புகார்கள் வந்தாலும், பாதிக்கப்பட்டவரால் தலைக்கு மேல் வெள்ளம் சென்ற கதையாக சமாளிக்க இயலாது என்ற சூழ்நிலையில் புகார்கள் அளிக்கின்றனர். மேலும், இந்தியாவின் எங்கோ ஓர் இடத்தில் தங்களின் இணையசேவையை வைத்துக்கொண்டு செயலாற்றி வருகிறார்கள். மைசூரில் வசித்து வந்த 26 வயது இளைஞரும் இளம்பெண்ணுடன் செல்போனில் பேசி இலட்சங்களை பறிகொடுத்துள்ளார். மேலும், முகநூலில் சுறுசுறுப்பாக இருக்கும் பிரபலங்களை குறிவைத்து, அவர்களின் புகைப்படத்தை எடுத்து பெண்ணுடன் இருப்பது போல மாபிங் செய்து மிரட்டி பணம் பறித்த சம்பவமும் நடந்துள்ளது.
மேலும், அவர்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் தகவலை திரட்டி களமிறங்குவதால், நாங்கள் சொல்வது போல செய்யவில்லை என்றால் முகநூலில் உள்ள உங்களின் நண்பர்களுக்கும் வீடியோவை அனுப்பி வைத்துவிடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர். இதனைப்போல, குஜராத் மாநிலத்தை சேர்ந்த அரசியல் பிரமுகரும் இளம்பெண்ணின் நட்பு வேண்டுகோளை ஏற்று ஆபாச வீடியோ காலில் சிக்கிக்கொண்டு பணத்தை இழந்துள்ளார். மும்பை, டெல்லி என பல்வேறு மாநிலத்தில் மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது.
அரைநிமிட வீடியோ கால் சுகத்திற்கு ஆசைப்பட்டு, பணம், மானம், மரியாதை இழக்க வேண்டாம்.