குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தோட்டத்தில் வேலை பார்த்த முதியவர்.! கூட்டாளியின் உதவியுடன் மகன், மருமகள் செய்த மோசமான காரியம்..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் முதியவரான ராசு. இவர் கடந்த 22 ஆம் தேதி தனது தோட்டத்தில் வேலை பார்க்க சென்ற போது மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனையில் ஈடுப்பட்ட உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து கொலை செய்த மர்ம நபரை தேடி வந்துள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது சொத்திற்காக பெற்ற மகனே, மனைவி மற்றும் நண்பரான அய்யானருடன் சேர்ந்து முதியவரை கொலை செய்து விட்டு நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.