ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மருத்துவமனை 6 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட வாலிபர்! வெளியான அதிர்ச்சி காரணம்!
திருச்சி கல்லுக்குழி முடுக்குபட்டி பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ். இவரது மகன் கணேசமூர்த்தி. 34 வயது நிறைந்த அவர் இன்னும் திருமணமாகாத நிலையில் கோவையில் உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் கணேசமூர்த்திக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது அதனால் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், காய்ச்சல் குணமாகவில்லை. இந்நிலையில் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என எண்ணிய மருத்துவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு காய்ச்சலுடன் மஞ்சகாமாலை இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் ஆறாவது மாடியில் உள்ள வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பத்து நாட்களுக்கு மேலாகியும் கணேசமூர்த்தி சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு குணமாகாததால் மனமுடைந்த அவர் நேற்று அவரது தந்தை உணவு வாங்கச் சென்ற நிலையில் மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த கணேசமூர்த்திக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கணேசமூர்த்தியின் உடலை கண்டு அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.