மீண்டும் உச்சத்தில் பெட்ரோல் விலை! கொரோனா சமயத்தில் ஷாக் ஆகும் வாகன ஓட்டிகள்!



petrol diesel price in chennai,

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து அவ்வளவாக இல்லயென்றாலும், பெட்ரோல் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

கொரோனா வைரஸ் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதத்தில் எந்த மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்தது. ஆனால் ஜூன் மாதம் முதல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்குவந்துள்ளது.

petrol price

சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.85.04ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.78.86-க்கு விற்பனை செய்யப்படுகிறது.