96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திடீரென அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை.! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு சமயத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தபோது பெட்ரோல் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனையடுத்து ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை மட்டும் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து ரூ.84.59-க்கும், டீசல் நேற்றைய விலையில் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.76.72-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.