திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பிளஸ் டூ மாணவி கற்பழிப்பு.!! 3 இளைஞர்கள் போக்சோவில் கைது.!!
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 வயது இளைஞருடன் நட்பு
சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் குறித்த இளைஞர் மாணவியுடன் கொல்லிமலைக்கு சென்று வரலாம் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் மாணவி வீட்டில் தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என மறுத்திருக்கிறார்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு
இந்நிலையில் மாணவியிடம் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிய இளைஞர் கடந்த எட்டாம் தேதியன்று மாணவியை அழைத்துக் கொண்டு தனது 2 நண்பர்களுடன் கொல்லிமலை சென்று இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் எனக் கூறிய அவர்கள் தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருக்கின்றனர். அப்போது மாணவிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 3 இளைஞர்களும் கூட்டு கற்பழிப்பு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பயங்கரம்... 3 லட்ச ரூபாய் பணத்திற்காக தந்தை படுகொலை.!! மகன் வெறி செயல்.!!
போக்சோ வழக்குப்பதிவு
இந்நிலையில் மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது தனது நண்பன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கற்பழிப்பு செய்ததை மாணவி தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் 3 இளைஞர்களையும் கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது.
இதையும் படிங்க: தீபாவளி புத்தாடை விவகாரம்.!! தற்கொலை செய்து கொண்ட 26 வயது இளைஞர்.!!