குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
மக்களே கவனம்... டெங்கு காய்ச்சலுக்கு 25 வயது இளம் பெண் மருத்துவர் பலி..! கவனமாக இருங்கள்..!!
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் பல் மருத்துவர் பலியான பரிதாபம் உள்ளூர் மக்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெட்டப்பாக்கம், மடுகரை கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரின் மகள் தனுஷியா (வயது 25). இவர் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் வசித்து வரும் சித்தா மருத்துவர் ஸ்ரீராம். இவர்கள் இருவரும் காந்த 5 வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
திருமணத்தை தொடர்ந்து இருவரும் சென்னையில் தங்கியிருந்து வேலைபார்த்து வருகிறார்கள். கடந்த வாரத்தின் போது தனுஷியாவிற்கு திடீர் காய்ச்சல் ஏற்படவே, சிகிச்சை மேற்கொள்வதற்காக தாயாரின் வீடு உள்ள மடுகரை கிராமத்திற்கு வருகை தந்துள்ளார். நேற்று இரவில் அவருக்கு கால்கள் அதிகமாகவே, சிகிச்சைக்காக அரியூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த தனுஷியாவிற்கு, பரிசோதனை செய்கையில் டெங்கு காய்ச்சல் என்பது உறுதியானது. அவருக்கு உரிய சிகிச்சை அளித்தும் பயனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பருவம் தவறி திடீரென பெய்யும் மழையின் காரணமாக பல உடல்நல கோளாறுகள் ஏற்பட தொடங்கியுள்ள நிலையில், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். லேசான காய்ச்சல் அறிகுறி இருப்பினும் மருத்துவரை நாடி பரிசோதனை செய்து உடல் நலத்தை பாதுகாப்பது நல்லது.