ரூ.2000 இனி அவ்ளோதானா; அரசின் திடீர் முடிவால் ஏமாற்றத்தில் ஏழைகள்.!



poor-people-account---rs2000---stoped---tn-government

கஜா புயல் பாதிப்பு மற்றும் போதிய மழையின்மையால் தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி உதவி மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்திற்கு ஒருவா் வீதம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவிக்கான வங்கி சான்றிதழை வழங்கி முதல்வா் பழனிசாமி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

High court

கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நிதி தொடா்ந்து செலுத்தப்படும். குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலேயே இந்த சிறப்பு நிதி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் குடும்பங்களை கண்டறிவதில் தவறு நடந்திருப்பதாகவும், தோ்தல் நோக்கத்திற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தாா். 

இந்த மனு தொடர்பாக மீண்டும் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டத்தால் பயனடையும் குடும்பங்களை தோ்வு செய்யும் திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மக்களவைத் தோ்தல் முடிந்த பின்னா் வழக்கின் விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டனா். 

இதனால் தங்களுக்கு பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ஏழைகளுக்கு சோகமே மிஞ்சியுள்ளது.