நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
இரண்டு நாட்கள் வெயிலுக்கு விடுமுறை! வாணிலை ஆய்வு மையம் மகிழ்ச்சி செய்தி
குமரி கடல், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாத்தின் இடையிலேயே வெயில் சுட்டெரிக்க துவங்கிவிட்டது. மேலும் மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே கத்திரி வெயில் போல, தமிழகம் முழுக்க கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஆங்காங்கு கடுமையான அனல் காற்றும் வீசி வருகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் பகல் நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில் வெளுத்து வாங்கும் வெயிலின் தாக்கத்தால் இரவில் கூட வீடுகளில் நிம்மதியாக தூங்க முடியாமல் போகிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உட்பட 12 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு குளிர்ச்சியான அறிவிப்பை வாணிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரி கடல், அதனை ஒட்டியுள்ள பகுதி, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் நாளை முதல் அனல் காற்று வீசுவது குறைய தொடங்கும் என்றும் மகிழ்ச்சியான ஒரு செய்தியை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.