கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
திடீரென சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை! மொத்தமாக தீர்ந்தது தண்ணீர் பிரச்னை!
தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். சில மாவட்டங்களில் மழையே பெய்யாததால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்கள் குடிதண்ணீருக்கே கஷ்டப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இன்றையதினம் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இன்று சென்னையில் திடீரென கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், பள்ளிக்கரணை, போரூர், ஐயப்பன் தாங்கல், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் நல்ல மலை பெய்தது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்கியில் உள்ளனர்.