மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென பெய்த மழை!. பருவமழை தொடங்கியதா? வானிலை ஆய்வு மையம் தகவல்!.
தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், வட கிழக்கு பருவமழை இந்த சமயத்தில் பெய்யவேண்டும். ஆனால் தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்ப்படிருக்கிறது.
தற்போது தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் மலை பெய்துவருகிறது.
இதன் காரணமாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பருவமழை தொடங்கும் எனவும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை முதல் சென்னையில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் பருவமழை தொடங்கவுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.