96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சிலிண்டர் டியூப்பை வாயில் சொருகி ரயில்வே ஊழியரின் விபரீத முடிவு!
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியை கார்த்திக் என்பவர் ரயில்வேயில் வேலைபார்த்து வந்துள்ளார். 30 வயது நிரம்பிய இவர் திருமணம் ஆகாத நிலையில் இவர் கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
கார்த்திக் பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல்நலம் சரியாகவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக நிம்மதியில்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கார்த்திக் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த அவரது சகோதரி, அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவ்கள் கொடுத்தார். கார்த்திக் கியாஸ் சிலிண்டர் டியூப்பை வாயில் சொருகி கொண்டு சுவாசித்து, மூச்சுத்திணறலில் கார்த்திக் பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்திக்கின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.