குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி! ஆறு மாத கர்ப்பம்! கடைசியில் வெளியான அண்ணனின் காமவெறியாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். 26 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சந்திரசேகரனின் தங்கை உறவு உடைய பெண் ஒருவர் உதவி செய்து வந்துள்ளார்.
காதலர்கள் இருவரும் சந்தித்து கொள்ள சந்திரசேகரன் அடிக்கடி தங்கையின் வீட்டிற்கு வந்துள்ளான். இந்நிலையில் அடிக்கடி வீட்டிற்கு வந்த சந்திரசேகரன் சிறுமியை மிரட்டி பாலியல் கொடுமையும் செய்து வந்துள்ளான்.
அதனை அடுத்து திடீரென அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அந்த சிறுமியை அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அச்சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஆறு மாத கர்ப்பம் என கூறியுள்ளனர்.
அதனை அடுத்து அந்த சிறுமியிடம் விசாரித்த போது சந்திரசேகரன் அண்ணன் தான் தன்னை மிரட்டி கடந்த ஒராண்டாக பாலியல் கொடுமை செய்தாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் சந்திரசேகரன் மீது போக்சோ வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர்.