திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட்ராசக்க.. இனி ரேஷன் கார்டு வீட்டில் இருந்தபடி உங்கள் கைக்கே வரும் - வெளியானது அசத்தல் அறிவிப்பு.!
தமிழகத்தில் தற்போது வரை 2.1 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இதன் மூலமாக குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களான அரிசி, சர்க்கரை, பருப்பு போன்றவை மலிவு விலைகளில் வழங்கப்படுகின்றன.
அரிசி இலவசமாக மத்திய & மாநில அரசுகள் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ரேஷன் அட்டை உள்ள நிலையில், அவை வீடு தேடி வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டு காணாமல் போனால் அல்லது திருத்தம் செய்ய நேரிட்டால் அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளன. புதுப்பித்த ரேஷன் கார்டுகளை பெற நேரில் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.
தற்போது புதுப்பித்த ரேஷன் கார்டை தபால் மூலமாக வீட்டில் இருந்து பெறலாம் என்றும், அதற்காக ரூபாய் 45 கட்டணம் செலுத்தப்பட வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.