96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
காதலுக்கு தந்தை எதிர்ப்பு; பெண் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்த பரிதாபம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். மகள் திலகவதி (வயது 26). சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
திலகவதிக்கும், சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் காதல் மொழிபேசி வைத்துள்ளனர்.
இருவரின் சமூகமும் வெவ்வேறு என்பதால், திலகவதியின் தந்தை முருகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன திலகவதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
அவரை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் இன்றி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் பரிதாபமாக பலியாகினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.