96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் திறப்பு.! சுழற்சி முறையெல்லாம் கிடையாது.! 100 சதவீத அட்டெண்டன்ஸ்.!
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் தற்போதும் இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனோ அச்சுறுதல் காரணமாக 2020 மார்ச் மாதம் இந்தியாவில் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தநிலையில் மீண்டும் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டன . இந்தநிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. இதனையடுத்து, அனைத்து வகை பள்ளிகளும் நாளை திறக்கப்பட உள்ளன.
இதுவரை சுழற்சி முறை என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் வகுப்பு நடத்தலாம் என்றும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளன.கொரோனாவுக்கு முந்தைய நிலையில் இருந்தது போல, தற்போதும் பள்ளிக்கு 100 சதவீத மாணவர்கள் வரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.