குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
108 கிடாய் வெட்டி விருந்து வைத்த சீமான்.! என்ன காரணம் தெரியுமா.?
சீமானின் மகனின் காதணி மற்றும் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கயல்விழி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு மாவீரன் பிரபாகரன் எனப் பெயர் சூட்டினார் சீமான். தன் மகன் மாவீரன் பிரபாகரனின் முதல் பிறந்தநாளை 2020 ஜனவரியில் கொண்டாடிய சீமான், தற்போது அவருக்குக் காதுகுத்தும் விழாவைப் பிரம்மாண்டமாக நடத்தினார்.
சீமானை மகனின் காதணி விழா சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரை கிராமத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் காதணி விழா நடந்தது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
காதணி விழாவில் 108 ஆடுகள் வெட்டி கறிவிருந்து அளித்தார் சீமான். இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் பாரதி ராஜா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.