96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பரபரப்பு.. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கூட்டுறவு செயலர்.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு வயது 17 ஆகும்.
இதனையடுத்து கடும் வயிற்று வலியினால் அவதியுற்ற அந்த சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாத கால கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடும் விசாரித்துள்ளனர்.
அப்போது சிறுமி காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி கூட்ரோடு பகுதியில் செயல்படும் சாப்பரத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து வரும் உதயண்ணன் உட்பட மூன்று பேரின் பெயர்களை கூறியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கானது நிலுவையில் இருந்த நிலையில் கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான நீதிபதி சுதா குற்றம் சாட்டப்பட்டவர்களில் உதயண்ணன் என்பவரது டி.என்.ஏ குழந்தையின் டி.என்.ஏ உடன் ஒத்துப் போகிறது.
எனவே சிறுமியை பாலில் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய உதயண்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இரண்டு நபர்கள் மீது சாட்சியங்கள் நிறுபனமாகாததால் அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.