குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
சென்னையில் பரபரப்பு..80 சவரன் நகையுடன் மாயமான புதுமணப்பெண்.. தீவிர விசாரணை..!
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார். இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னம்குப்பம் பகுதியில் வசித்து வரும் ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவரது மகள் ஆர்த்திக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பாக ஆர்த்திக்கு 80 சவரன் நகை போட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ஆர்த்தி சேலையூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்து வந்துள்ளார். இதனையடுத்து கல்லூரிக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆர்த்தி அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் ஆர்த்தி வீட்டிற்கு வரவில்லை என்றும் மேலும் வீட்டிலிருந்த 80 சவரன் நகை காணவில்லை என்றும் அவரது கணவர் விக்னேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆர்த்தி திருமணத்திற்கு முன்பே ஒரகடம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ஆர்த்தியின் முன்னாள் காதலரான ஆகாஷ் உடன் 80 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.