96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பரபரப்பு சம்பவம்.. தலைக்கேரிய மதுபோதை.. தந்தை என்றும் பாராமல் அடித்தே கொன்ற மகன்.!
தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரி பஞ்சாயத்து காலனி பகுதியை சேர்ந்தவர் மணி. இவருக்கு கார்த்திக் மற்றும் சந்துரு என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் சந்துரு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று சந்துரு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது அண்ணன் கார்த்திக் அவரை கடுமையாக சாடியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அவரது தந்தையான மணியும் சந்துருவை திட்டி உள்ளார்.
இதனால் கோபமடைந்த சந்துரு தன் தந்தை என்றும் பாராமல் அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் மணியின் தலையில் பலத்த காயம் ஏற்படவே பதறிப்போன மூத்த மகன் தந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு மணிக்கு முதல் உதவி செய்யபட்டு பின் அவரை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் கார்த்திக் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சந்துரு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து காவல் துறையினர் சந்துரு மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் குடி போதையில் தந்தை மரணமடைய மகனே காரணமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.