96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கடவுளின் அவதாரம் என கூறி பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.! சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை.!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ ராமராஜ்யா என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. 72 வயதான இவர், கடந்த 20 ஆண்டுகளாக கேளம்பாகத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. சிவசங்கர் பாபா, தன்னை கடவுளின் அவதாரம் என அழைத்துக் கொண்டு, பள்ளியில் பயிலும் மாணவிகளை பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன், காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்துள்ளனர்.