96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
காதலன் திருநங்கை என்று அறிந்ததால் ஷாக்கான காதலி.. பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுப்பதாக அழைத்து சென்று தீர்த்துக்கட்டிய காதலன்.. ஐ.டி ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.!
மதுரையை சேர்ந்த 28 வயது நிரம்பிய நந்தினி என்ற இளம்பெண் சென்னையில் ஐ.டி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கிலியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இந்த சம்பவமானது பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் ஐ.டி பெண் ஊழியரான நந்தினியின் முன்னாள் காதலனை கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவுள்ளது.
அதாவது நந்தினி காதலித்து வந்த வெற்றி திருநங்கை என்று நந்தினிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் நந்தினி தனது காதலை கைவிடும்படி வெற்றிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றி நந்தினியின் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸ் தருவதாக கோயில் உட்பட பல இடங்களுக்கு அழைத்து சென்று இரவு இந்த கொடூரமான கொலை செய்ததை வாக்குமூலமாக கூறியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட வெற்றிடம் போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.