"உனக்கு கிஃப்ட் அனுப்பிருக்கேன்..." கிஃப் வருவதாக கூறி ஆன்லைன் மோசடி... இளம் பெண் தற்கொலை.!



shock-in-chennai-online-scam-claiming-to-be-a-gift-youn

ஆன்லைன் பண மோசடியால் சென்னையைச் சேர்ந்த இளம் பெண் தற்கொலை செய்திருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் அஸ்வினி வயது 20  இவருக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமான ஒரு நபர் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும் 15,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருளை பரிசாக அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

tamilnadu

இதனை உண்மை என்று அந்த பெண் நம்பி இருந்த நிலையில் சுங்க அதிகாரிகளிடம் அந்த பொருள் இருப்பதாகவும் 45 ஆயிரம் ரூபாய் செலுத்தி அந்த பொருளை வாங்கி  கொள்ளவும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த பணத்தை செலுத்த தவறினால் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்வார்கள் என மிரட்டி உள்ளார்.

tamilnadu

இதனால் மிகுந்த பதற்றத்திலிருந்த அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண்ணை மிரட்டி என நபர் யார்.? என்பது தொடர்பாக சைபர் கிரைம் அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை செய்து வருகின்றனர்.