குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அதிர்ச்சி.. மாயமான கல்லூரி மாணவி.. கதறும் பெற்றோர்.!
விருத்தாசலம் அடுத்த இருளக்குறிச்சி கிராமத்தில் சரவணன் தனது மனைவி மற்றும் மகள் சுஷ்மிதாவுடன் வசித்து வந்துள்ளார். சுஷ்மிதா விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் படித்து வந்துள்ளார்.
சுஷ்மிதா தினமும் தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வருவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சுஷ்மிதா வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுஷ்மிதா வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுஷ்மிதாவின் பெற்றோர் ஆலடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காணாமல் போன மாணவி சுஷ்மிதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.