96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அதிர்ச்சி சம்பவம்.. நிலத்தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன்.. கைது நடவடிக்கையில் போலீஸ்..!
ஓசூர் சூளகிரி அருகே கோட்டசாதனபள்ளி பகுதியில் வசித்து வந்தவர்கள் பாலாஜி - ராதா தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் பாலாஜி வீட்டிற்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் பாலாஜியின் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பாலாஜி இரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து பாலாஜியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று பாலாஜி மற்றும் அவரது அண்ணன் தனஞ்செயன் ஆகிய இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் விவசாய நிலம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தனஞ்செயன் தம்பி என்றும் பாராமல் பாலாஜியை அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் பாலாஜியின் உடலை வீட்டிற்குள் போட்டு வெளிப்புறமாக கதவை பூட்டி விட்டு சென்றதாக போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து தனஞ்செயனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.