96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அதிர்ச்சி.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கல்லாலே அடித்து கொடூரமாக கொலை செய்த தாய் மற்றும் மகன்.. தீவிர விசாரணை.!
ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் நடராசன் - ஜெயலட்சுமி தம்பதியினர். நடேசன் காவல்துறையில் எஸ்.ஐ ஆக பணியாற்றி கடந்த 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில் நடேசன் ரெட்டிபாளையம் வெள்ளகரட்டில் தனக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். அப்போது இவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த மசிரியம்மாள் என்பவருக்கும் நடேசனுக்கும் வண்டிப்பாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனால் இந்த பிரச்சனை தொடர்பான வழக்கு அந்தியூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துள்ளது. மேலும் விவசாய விலைப் பொருள்களைக் கொண்டு செல்ல நடேசனுக்கு கடந்த மாதம் தற்காலிக உத்தரவும் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அந்த உத்தரவின்படி பொதுப்பதையை சீரமைக்கும் பணியில் நடேசன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மசிரியம்மாள் மற்றும் அவரது மகன் தமிழரசன் ஆகியோர் நடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கற்களால் நடேசனை அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நடேசன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த நடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலைக்கு காரணமான மசிரியம்மாள் மற்றும் அவரது மகன் தமிழரசன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.