குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஆபாச படம் காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாற்றுத்திறனாளி.. அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்.!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒட்டக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் சோனமுத்து (வயது 52). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு சிறுமிக்கு செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் சிவகங்கை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த காவல்துறையினர் சோனமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தற்போது அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.