96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஊரடங்கால் 3 மாதங்களாக பூட்டிக்கிடந்த வீடு! வீட்டிற்குள்ளே சிலிண்டரில் இருந்து குபீரென பாய்ந்த பாம்பு!
தமிழகத்தில் கொரானா வரைஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் சென்னையில் வாடகைக்கு குடி இருப்பவர்களுக்கு முற்றிலும் தொழில் பாதிக்கப்பட்டு, சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் பலரும் குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு சென்று விட்டனர். தற்போது தமிழகத்தில் பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டதால். குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு சில வீட்டின் உரிமையாளர்களும் அட்வான்ஸ் பணம் இதுவரை கழிந்துவிட்டது. இந்த மாதத்தில் இருந்து வாடகை கொடுக்க வேண்டும், என வாடகைக்கு குடி இருப்பவர்களை வற்புறுத்துகின்றனர்.
கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதே பெரும் சவாலாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இனிமேல் சென்னையில் சென்று தொழில் செய்ய முடியாது என நினைத்து பலரும் சொந்த கிராமத்திலேயே தங்கி விடலாம் என முடிவெடுத்து வீட்டை காலி செய்கின்றனர்.
இந்தநிலையில் சென்னை மேடவாக்கத்தில் ராஜ் என்ற நபர் மூன்று மாதத்திற்கு பிறகு, வாடகை கொடுக்கமுடியாத சூழ்நிலையில் வாடகை வீட்டில் உள்ள அவரது பொருட்களை எடுத்து அவரது நண்பர் வீட்டில் வைப்பதற்காக பொருட்களை எடுத்துள்ளார். அப்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் அடியில் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று இருந்துள்ளது. சிலிண்டரை தூக்கி வைக்கும்பொழுது பாம்பு குபீரென தலையை நீட்டியுள்ளது. இதனால் பதற்றமடைந்த ராஜின் நண்பன் சிலிண்டரை கீழே வைத்துவிட்டு அலறல் சத்தம் போட்டுள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பாம்பை வீட்டின் வெளியே விரட்டிவிட்டனர். நீண்ட நாட்களாக வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததால் பாம்பு சமையலறை வரை சென்றுள்ளது. வீட்டின் வெளியில் இருக்கும் ஷூ, காலணிகள், சிலிண்டர் போன்றவற்றை தினமும் கவனுமுடன் சோதனை செய்வது இந்த சமயத்தில் பயனுள்ளதாக இருக்கும்.