96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
செலவுக்கு பணம் தரலை! அதான்.. துடியாய் துடிக்க இரக்கமேயின்றி தந்தைக்கு மகன் செய்த கொடூரம்!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், வீரகுமாரபிள்ளை தெருவில் வசித்து வந்தவர் 58 வயது நிறைந்த செல்லையா. இவருக்கு 35 வயதில் வேதநாயகதுரை என்ற மகன் உள்ளார். அவர் திருமணமாகி தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் செல்லையா வழக்கம்போல இரவு கோவிலில் தூங்கியுள்ளார்.
மறுநாள் காலை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தபோது செல்லையா கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடனே அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் செல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
பிறகு விசாரணை மேற்கொண்டதில் செல்லையாவை வெறித்தனமாக கொன்றது அவரது மகன் வேதநாயக துரைதான் என்பது தெரியவந்தது. அதாவது சமீபத்தில் வேதநாயக துரை உடல்நலக்குறைவு ஏற்பட்ட தனது தந்தை செல்லையாவை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்பொழுது தனது செலவிற்கு செல்லையாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வேதநாயக துரை கோவிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதநாய துரையை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.