ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்!. டிக்கெட் முன்பதிவு இன்றுமுதல் தொடக்கம்.!



special train start from chennai

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் நாளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையும் உலக அளவில் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து முடக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கில் இருந்து  சில தளர்வுகள்அளிக்கப்பட்டு போக்குவரத்து சிக்கல்கள் தவிர்க்கப்பட்டது. இந்தநிலையில், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரிசையாக வரவிருப்பதால், அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை, திருவிழா சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக இந்திய ரயில்வே கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. 

special train

இந்தநிலையில் தற்போது, தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் இடையேயும், சென்னை எழும்பூர்-கொல்லம் இடையேயும் மற்றும் சென்னை எழும்பூர்-திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06866) வரும் 26ம் தேதி முதல் தினசரி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும் எனவும், மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06865)வரும்  27-ஆம் தேதி முதல்,  தினசரி இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 6 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06101) வரும் 25-ஆம் தேதி முதல், தினசரி மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புபுறப்பட்டு கொல்லத்திற்கு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம்- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்(06102) வரும் 26-ஆம் தேதி முதல், தினமும் மதியம் 12 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

special train

அதேபோல் சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்(02653) வரும் 27-ஆம் தேதி முதல், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக திருச்சி-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்(02654) வரும் 26-ஆம் தேதி முதல், தினசரி இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்துபுறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று சனிக்கிழமை 24.10.2020 காலை 8 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.