மத்திய அரசு கொடுத்ததோ ஆதார் அட்டை!.. மாநில அரசு கொடுக்கப் போகுது இன்னொரு அட்டை: தமிழக அரசின் மாஸ்ட்டர் ப்ளான்..!!



Tamil Nadu government is going to issue a 10 to 12 digit People ID to the residents of Tamil Nadu.

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் உள்ள மக்கள் ஐடியை தமிழக அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு மூலம் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. 
ஆதார் தனி நபர் அடையாள அட்டையாகும். ஆதார் அட்டை அரசு சம்பந்தப்பட்ட மிக முக்கிய ஆவணமாகி உள்ளது. பாஸ்போர்ட் எடுப்பது, ரேஷன் கார்டு, ஒட்டர் ஐடி, வங்கி பரிவர்த்தனை, விமான பயணம் என அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.

முன்பு ரேஷன் கார்டு இருந்தது போல் தற்போது அனைத்திற்கும் ஆதார் தேவைபடுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் குடியிருப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் உள்ள மக்கள் ஐடி தமிழக அரசு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மக்கள் ஐடி சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பயன்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக அரசால், மாநில குடும்ப தரவு தளம் உருவாக்கப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படுத்துவதற்கான வேலைகள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.