96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#Breaking: தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகிறது! தமிழக அரசு உத்தரவு
பள்ளிகளில், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களை வரும் 16-ம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. ஒருசில மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் மீண்டும் செய்யப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தற்போதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படுகிறது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களை வரும் 16-ம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.