96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அதிகாலையில் தமிழிசை சவுந்தராஜன் வீட்டில் நடந்த துக்க நிகழ்வு.! கடும் சோகத்தில் பாஜகவினர்.!
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியும், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜனின் தாயாருமான கிருஷ்ணகுமாரி வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழிசை சவுந்தராஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில், "என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார். என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.
என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்...
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 18, 2021
என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்.(2/2)
என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார். தமிழிசை சவுந்தராஜன் தாயார் மறைவிற்கு அணைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.