96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தமிழ் மக்களின் வாழ்வு சிறக்க, தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள சகோதரருக்கு வாழ்த்துக்கள்.! தமிழிசை சவுந்தரராஜன்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், புது முகங்களுக்கு இந்தமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர்களாக புதிதாக பதவியேற்றுள்ளவர்களுக்கு தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் தெளிவான வழிகாட்டுதலின்படி புதிதாக மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் தெளிவான வழிகாட்டுதலின்படி புதிதாக மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/969JsL6kE0
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 8, 2021
நம் பாரத திருநாட்டை உலக அரங்கில் பீடு நடைபோடுவதற்கும், நம் தாய் திருநாட்டின் பெருமையை உயர்த்துவதற்கும், நம் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் ஒவ்வொரு கடைக்கோடி இந்தியருக்கும் கிடைப்பதற்கும் இந்த அமைச்சரவை செயலாற்றும் என்பது உறுதி. அனைத்து தரப்பினரையும், அதிக எண்ணிக்கையில் மகளிரையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அருமைச் சகோதரர் எல்.முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பணி இந்திய நாட்டிற்கும், தமிழ் மக்களின் வாழ்வு சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என குறிப்பிட்டுள்ளார்.