வேளாண்பட்ஜெட் 2023: வண்டல் மண்ணை விவசாயித்திற்கு இலவசமாக எடுக்க அனுமதி; தொழில் முனைவோருக்கு நிதிஉதவி அறிவிப்பு.!



Tamilnadu agriculture budget 2023 24

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவையில் அவர் பேசியவை பின்வருமாறு, 

டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி நடந்துள்ளன. ரூ.1665 கோடி ஒதுக்கீட்டில் பயிர் மானியமாக 9 இலட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக நேரடி நெல் கொள்முதல் போல பயறு, கொப்பரை தேங்காயும் கொள்முதல் செய்யப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

வேளாண்மை பட்ஜெட்

இயற்கை இடர்பாட்டினால் பாதிக்கப்பட்ட 40.74 இலட்சம் ஏக்கர் பதிவு செய்யப்பட்டு 26 இலட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளன.

வேளாண் தோட்டக்கலை பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் தொழில்முனைவோராக ரூ.2 இலட்சம் நிதிஉதவி வழங்கப்படும். அதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏரி, குளத்தில் உள்ள வண்டல் மண்ணை விவசாய பயன்பாடுகளுக்கு எடுக்க அனுமதி இலவசம்.