96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஜோலி முடிஞ்சது..! பரிதாபங்கள், நக்கலைட்ஸ் உட்பட 15 க்கும் மேற்பட்ட யூடியூப் பக்கம் ஹேக்கர்களால் முடக்கம்.!
தமிழகத்தில் பிரபலமாக இருந்த யூடியூப் கணக்குகளான பரிதாபங்கள், நக்கலைட்ஸ், லைட்ஹவுஸ், சென்னை மீம்ஸ், சோதனைகள் உட்பட 15 க்கும் மேற்பட்ட யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முடக்கம் செய்யப்பட்ட யூடியூப் பக்கங்களில், கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைப்போல, 100 க்கும் மேற்பட்ட பல்வேறு சிறிய அளவிலான சேனல்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
க்ரிப்டோ கரன்சி விவகாரத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கிலேயே ஹேக்கர்கள் கைவைத்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், முகநூலில் பிரபலமான பக்கங்களை குறிவைத்து ஹேக் செய்யும் ஆபாச இணைய கும்பல், ஆபாச படங்களை ஸ்டேட்டஸ் பக்கத்தில் பதிவிடுவதும் வாடிக்கையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.