3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
இன்று தமிழக மக்களுக்கு கிடைக்கவிருக்கும் அதிர்ஷ்டம்!! மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!!
2019 – 20ம் ஆண்டுக்கான தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளாா். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார்.
2019 - 20ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்தது. இந்நிலையில் தமிழகத்திற்கான 2019 – 20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா் செல்வம் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா். மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் வழக்கத்தைவிட இந்த அறிக்கையில், புதிய அறிவிப்புகளும்,சலுகைகளும் இடம் பெறும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தக் கூட்டத் தொடரில் கோடநாடு விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிவாரணம், கஜா புயல் நிவாரண நிதி, பட்டாசுத் தொழில் உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்களில் முடிவு எட்டப்படாத நிலையில் இது குறித்து கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.