அரசுப் பணிக்கு அரிய வாய்ப்பு! தமிழக காவல் துறையிலதா வேலை; எவ்ளோ பணியிடம்னு பாருங்க.!
பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறையில் 8,826 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகியவற்றில் மொத்தம் 8826 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காவல்துறையில் மட்டும் 8427 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாவட்ட அல்லது மாநர ஆயுதபடையில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 2465 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மேலும் சிறைத்துறை தீயணைப்புத்துறை போன்ற துறைகளுக்கு பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான அறிவிப்பு வெளியான தேதி - 06.03.2019
ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் - 08.03.2019 (காலை 10 மணி)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் - 08.04.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - பின்னர் அறிவிக்கப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 01-07-2019 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பு 26. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 29. ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு 35.
எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தேர்வு எழுதுவதற்கான நேரம் 80 நிமிடங்கள். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயம்.
www.tnusrbonline.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.