கேரளாவில் பயங்கரம்... ஓடும் ரயிலில் தமிழர் கொலை.!! கேரளா ரயில்வே ஊழியர் கைது.!!



tamilnadu-youngster-was-murdered-in-mangalore-kochuveli

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்ற இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பயணிகள் அளித்த தகவலின் பேரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் அணில் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சாதாரண டிக்கெட் எடுத்து ஏசி பெட்டியில் பயணம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் கோபி என்ற இளைஞர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக மங்களூர் கொச்சிவேலி சிறப்பு ரயிலில் அக்டோபர் 12ஆம் தேதியன்று பயணம் செய்திருக்கிறார். மேலும் பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு எடுத்த அவர் ஏசி பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

India

கொலையில் முடிந்த வாக்குவாதம்

இந்நிலையில் ரயில் கோழிக்கோடு ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு பெட்ஷீட் கொடுப்பதற்காக ரயில்வே தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரான அணில் குமார் என்பவர் வந்திருக்கிறார். இவர் கேரள மாநிலம் கன்னுரை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படிக்கட்டில் அமர்ந்திருந்த சரவணன் கோபி இடம் பயண சீட்டு குறித்து விசாரித்திருக்கிறார். மேலும் பொது பிரிவில் டிக்கெட் எடுத்துவிட்டு ஏசி பெட்டியில் பயணம் செய்யக்கூடாது எனக் கூறி அவரிடம் விவாதம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அணில் குமார், சரவணன் கோபியை ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தில் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த சரவணன் மீது ரயில் சக்கரம் ஏறி இறங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: வீடியோ: பாதுகாப்பாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.!! 141 பயணிகளும் நிம்மதி பெரும் மூச்சு.!!

காவல்துறைக்கு தகவல்

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மேலும் காயமடைந்த சரவணன் கோபியை மீட்ட காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரவணன் கோபி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ரயில் பயணிகள் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அணில் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பயணி ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: திருமணமான 9 மாதத்தில் சோகம்... போதை ஊசி மூலம் உயிரை மாய்த்துக் கொண்ட 21 வயது இளைஞர்.!!